ஏமனில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: 10 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு


ஏமனில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: 10 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
x

ஏமனில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 10 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

சனா,

ஏமனில் அந்ந நாட்டு அரசுக்கும், ஈரான் ஆதரவு பெற்று ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டதோடு, லட்சக்கணக்கான மக்கள் உயிருக்கு பயந்து அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர்.

இந்த சூழலில் நீண்டகால பேச்சுவார்த்தைக்கு பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் இரு தரப்பும் சண்டை நிறுத்தத்தை அறிவித்தன. ஆனாலும் சண்டை நிறுத்தத்தை மீறி அவ்வப்போது சிறிய அளவிலான மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

இந்த நிலையில் ஏமான் நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள டேஸ் நகரில் நேற்று முன்தினம் ராணுவ வீரர்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் ராணுவ வீரர்கள் 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் பலர் வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.


Next Story