ஜெர்மனி: சாலையோரம் நின்றுகொண்டிருந்த பள்ளி மாணவர்கள் மீது கார் மோதல் - ஆசிரியை பலி


ஜெர்மனி: சாலையோரம் நின்றுகொண்டிருந்த பள்ளி மாணவர்கள் மீது கார் மோதல் - ஆசிரியை பலி
x

ஜெர்மனியில் சாலையோரம் நின்றுகொண்டிருந்த பள்ளி மாணவர்கள் மீது கார் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் ஆசிரிஅயி உயிரிழந்தார்.

பெர்லின்,

ஜெர்மனி நாட்டின் ஹீன்ஸ் மாகாணத்தை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் சுற்றுலா பயணம் சென்றனர். அந்த வகையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பள்ளி மாணவ-மாணவிகள் நேற்று பெர்லின் நகரில் உள்ள ஒரு சாலையில் நின்றுகொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு வேகமாக வந்த கார் ஒன்று சாலையோரம் நின்றுகொண்டிருந்த மாணவ- மாணவிகள் மீது வேகமாக மோதியது. தடுக்க முயன்ற ஆசிரியை மீதும் கார் மோதியது. இந்த மோதலில் பள்ளி ஆசிரியை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், 9 பேர் படுகாயமடைந்தனர்.

விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோட முயன்ற கார் டிரைவரை அக்கிருந்தவர்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து, கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர். கைது செயப்பட்ட நபர் அமெரிக்காவை சேர்ந்த ஜெர்மனியில் வசித்து வரும் நபர் என தகவல் வெளியாகியுள்ளது.


Next Story