ஜி 20 மாநாடு: பரஸ்பரம் வணக்கம் தெரிவித்துக்கொண்ட பிரதமர் மோடி- ஜி ஜின்பிங்
பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே அதிகாரப்பூர்வ சந்திப்புக்கு எதுவும் திட்டமிடப்படவில்லை.
பாலி,
இந்தோனேசியாவின் பாலியில் ஜி 20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தோனேசியா சென்றுள்ளார். ஜி 20 உறுப்பு நாடுகளின் தலைவர்களும் இந்தோனேசியாவில் முகாமிட்டுள்ளனர். ஜி 20 மாநாட்டுக்கு இடையே இன்று பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்துக்கொண்டனர்.
பரஸ்பரம் ஒருவொருக்கொருவர் வணக்கம் செலுத்திக்கொண்டு நலம் விசாரித்ததாக தெரிகிறது. இரவு உணவு விருந்தின் போது இரு தலைவர்களும் இப்படி நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டனர். சிறிது நேரம் பேசிக்கொண்டு இருக்கும் காட்சிகளும் வெளியாகியுள்ளன. எனினும் இரு தலைவர்களுக்கும் இடையே அதிகாரப்பூர்வ சந்திப்பு குறித்து எந்த திட்டமும் வகுக்கப்படவில்லை.
Related Tags :
Next Story