வெள்ள நிவாரணம் பெயரில் பாலியல் பலாத்காரம் தலைகுனிந்த பாகிஸ்தான் ஐநா தூதர்


வெள்ள நிவாரணம் பெயரில் பாலியல் பலாத்காரம் தலைகுனிந்த பாகிஸ்தான் ஐநா தூதர்
x

வெள்ள நிவாரணம் என்ற பெயரில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக குறறச்சாட்டை பாகிஸ்தான் ஐநா தூதர் மசூத் கான் அமெரிக்காவில் எதிர்கொண்டார்.

வாஷிங்டன்:

பாகிஸ்தானில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த இந்து சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை வர்ஜீனியாவின் முன்னாள் காங்கிரஸ் வேட்பாளரும் ராணுவ வீரருமான மங்கா ஆனந்த்முலா கடுமையாக விமர்சித்துள்ளார்.

பாகிஸ்தான் வெள்ளத்தால் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. பாகிஸ்தானின் நான்கில் மூன்று பங்கு தண்ணீரில் உள்ளது.இது போன்ற ஒரு சூழ்நிலையில் சிந்து மாகாணத்தில் வெள்ள நிவாரணம் வழங்குவதாக ஏமாற்றி அழைத்து செல்லப்பட்டு இந்து சிறுமி ஒருவர் கூட்டுபாலியல் பலாத்காரம் செய்யபட்டு உள்ளார்.

இந்த நிலையில் வாஷிங்டனில் உள்ள தேசிய பிரஸ் கிளப்பில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஐ.நா பாகிஸ்தான் தூதர் மசூத் கான் பாகிஸ்தானில் ஏற்பட்ட வரலாற்று வெள்ளம் குறித்து பேட்டி அளித்தார்.அப்போது வர்ஜீனியாவின் முன்னாள் காங்கிரஸ் வேட்பாளரும் ராணுவ வீரருமான மங்கா ஆனந்த்முலா

பாகிஸ்தானில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் கொடூரமானது. மதமாற்றம், வன்முறை, பலாத்காரம் போன்ற கொடூர சம்பவங்கள் நாளுக்கு நாள் அரங்கேறி வருகின்றன. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான செயல்களை முடிவுக்கு கொண்டு வர தயாராக இருக்க வேண்டும். பாகிஸ்தான் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டால், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்தால், யாராலும் உதவ முடியாது.

பாகிஸ்தான் தூதரை எதிர்கொண்டு, பாகிஸ்தானில் சிறுபான்மைப் பெண்களுக்கு எதிரான கட்டாய மதமாற்றங்கள், கற்பழிப்பு மற்றும் பிற குற்றங்கள் பற்றிய கவலைகளை மசூத் கானுக்குத் தெரிவித்தார்.

செய்தியாளர் கூட்டத்தில், தன்னை பாதிக்கப்பட்டவராக சித்தரிக்கும் பாகிஸ்தானின் முயற்சிகள் விமர்சிக்கப்பட்டன, மேலும் நிலையான உள்கட்டமைப்பு மேம்பாட்டை விட பாகிஸ்தான் அதன் இராணுவ மற்றும் அணுசக்தி திறன்களில் ஏன் முதலீடு செய்கிறது என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதனால் தூதர் கான் மவுனமானார் மற்றும் பத்திரிகையாளர்களின் முக்கியமான கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் தலை குனிந்தார்.

பாகிஸ்தானில் ஜூன் மாதத்தில் மொத்தம் 157 பெண்கள் கடத்தப்பட்டனர், 112 பெண்கள் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு உள்லனர். பாகிஸ்தான்முழுவதும் 91 பெண்கள் கற்பழிக்கப்பபட்டு உள்ளனர்.


Next Story