உத்தரபிரதேசத்தில் 4.5 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை கொடுத்துள்ளோம் - யோகி ஆதித்யநாத்
உத்தரபிரதேசத்தில் 2017 ஆம் ஆண்டு முதல் தற்போதுவரை 4.5 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை கொடுத்துள்ளோம் என்று அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
லக்னோ,
403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2022) தேர்தல் நடைபெற உள்ளது. இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரபிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் பல்வேறு தரப்பினர் இடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் களமிறங்க உள்ளன. குறிப்பாக, உத்தரபிரதேசத்தில் ஆட்சியை தக்கவைக்க பாஜக தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், உத்தரபிரதேச வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற திட்டமிடல் துறையில் உதவி பொறியாளர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 33 பேருக்கு நியமண ஆணைகளை அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இன்று வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் யோகி ஆதித்யநாத் பேசுகையில், 2002-17 இடையேயான ஆண்டுகளை ஒப்பிடும்பொது 2017-ம் ஆண்டுக்கு பிறகு அரசு மற்றும் தனியார் துறைகளில் பல மடங்கு வேலை கொடுக்கப்பட்டுள்ளது. வேலை நியமனத்தை பொறுத்தவரை எந்த போட்டியாளருக்கும் யாருடைய பரிந்துரையும் தேவையில்லை. நியமனத்தில் ஏதேனும் தவறு நிகழ்ந்திருப்பதாக சிறு தடையம் கிடைத்தாலும் நமது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும்.
கடந்த 2017-ம் ஆண்டு முதல் இதுவரை நான்கரை ஆண்டுகளில் நியமனங்களை வெளிப்படைத்தன்மையுடன் நடத்துகிறோம். 2017 முதல் தற்போது வரை மாநில அரசின் பல்வேறு துறைகளில் 4.5 லட்சம் இளைஞர்கள் அரசுவேலை பெற்றுள்ளனர்’ என்றார்.
Related Tags :
Next Story