மண்டல அளவிலான வளர்ச்சி திட்ட பணிகள்: சேலத்தில் 2ம் நாளாக முதல் அமைச்சர் கள ஆய்வு


மண்டல அளவிலான வளர்ச்சி திட்ட பணிகள்: சேலத்தில் 2ம் நாளாக முதல் அமைச்சர் கள ஆய்வு
x

முதல் அமைச்சர் திட்டத்தின் கீழ் சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட 4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

சேலம்,

தமிழ்நாட்டில் 'கள ஆய்வில் முதல்-அமைச்சர்' என்ற திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். அதன்படி, அவர் வேலூர் மண்டலத்தில் சில நாட்களுக்கு முன்பு கள ஆய்வுக்கூட்டத்தை நடத்தினார்.

அடுத்தகட்டமாக சேலம் மண்டல அளவிலான கள ஆய்வுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், சேலம் மண்டல அளவிலான 4 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பான கள ஆய்வுக்கூட்டம் 2 நாட்கள் நடைபெறுகிறது.

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் இந்த ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று சேலம் சென்றடைந்தார். விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரில் சென்று ஆய்வுப்பணிகளை மேற்கொண்டார்.

கள ஆய்வில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ், ஓமலூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் ஆய்வுப்பணிகளை மேற்கொண்ட முதல்-அமைச்சர் ஓமலூரில் நடைபெற்று வரும் திட்டங்களின் செயல்பாடு குறித்து வட்டாச்சியரிடம் கேட்டறிந்தார். இதன் தொடர்ச்சியாக சேலம் சென்ற அவர், ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து ஈரடுக்கு பேருந்து நிலையம், விக்டோரியா கலையரங்கம் ஆகிய இடங்களிலும் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த நிலையில், கள ஆய்வின் இரண்டாம் நாளான இன்று முதல் அமைச்சர் திட்டத்தின் கீழ் சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட 4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.


Next Story