நெல்லையப்பர் கோவிலில் யுகாதி பண்டிகை சிறப்பு வழிபாடு


நெல்லையப்பர் கோவிலில் யுகாதி பண்டிகை சிறப்பு வழிபாடு
x

யுகாதி பண்டிகையை முன்னிட்டு நெல்லையப்பர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

திருநெல்வேலி

நெல்லை பாளையங்கோட்டையில் தெலுங்கு வருடபிறப்பான யுகாதி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு பாளையங்கோட்டை நாயுடு சமுதாய சங்கம் சார்பில் நெல்லை டவுன் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலில் உள்ள நாயக்கமன்னர்கள் சிலைகளுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. நெல்லை மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் நாயுடு தலைமையில் நாயக்கமன்னர்கள் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தவமணி விஜயலட்சுமி, வசந்தா, சித்ரா, இசக்கிமுத்து, மூர்த்தி, கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகே உள்ள கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கணேசன், நாகராஜ், முரளிதரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



Next Story