மதுவிற்ற வாலிபர் கைது


மதுவிற்ற வாலிபர் கைது
x

மதுவிற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

வேலூர்

மதுவிற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

வேலூர் ரங்காபுரம் அருகே மது விற்பனை செய்யப்படுவதாக சத்துவாச்சாரி போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது ரங்காபுரத்தில் உள்ள வேலூர் மண்டல அரசு போக்குவரத்துக்கழக பணிமனை அருகே மாந்தோப்பில் நின்று கொண்டிருந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில், அவர் ரங்காபுரம் பாறைமேடு பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது 35) என்பதும், மதுவிற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.



Next Story