ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது
ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது
கோயம்புத்தூர்
ஆனைமலை
ஆனைமலையை அடுத்த மக்கள் சக்தி நகரை சேர்ந்தவர் சாதிக்(வயது 30). இவர் ஆனைமலை ஒன்றியத்தில் உள்ள பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை விலை கொடுத்து வாங்கி கேரளாவில் அதிக விலைக்கு விற்று வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் செம்மாம்பதி சோதனைச்சாவடி வழியாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக பொள்ளாச்சி சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆனைமலை போலீசார் மற்றும் குடிமைப்பொருள் அதிகாரிகள் இணைந்து ஆனைமலை, செம்பனாபதி, பெரிய போது உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது செம்பனாபதி அருகே சாதிக் ஓட்டி வந்த காரை சோதனை செய்தனர். அதில் 200 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. பின்னர் ரேஷன் அரிசியுடன் கார் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ரேஷன் அரிசியை கடத்திய சாதிக் கைது செய்யப்பட்டார்.
Related Tags :
Next Story