திண்டுக்கல் அருகே விஷம் குடித்த வாலிபர் சாவு
திண்டுக்கல் அருகே விஷம் குடித்த வாலிபர் இறந்துபோனார்.
திண்டுக்கல்
திண்டுக்கல் அருகே உள்ள அனுமந்தராயன்கோட்டையை சேர்ந்தவர் ஜோசப் சேசுராஜ். இவரது மகன் கென்னடி (வயது 21). கூலித்தொழிலாளி. இவர், கடந்த சில மாதங்களாகவே வயிற்று வலியால் அவதியடைந்தார். இதற்காக அவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார். ஆனாலும் வயிற்றுவலி குணமாகவில்லை.
இதனால் மனமுடைந்த அவர் கடந்த 1-ந்தேதி பூச்சி மருந்து (விஷம்) குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கென்னடி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story