மதுகுடிக்க மனைவி பணம் தராததால் வாலிபர் தீக்குளித்து தற்கொலை


மதுகுடிக்க மனைவி பணம் தராததால் வாலிபர் தீக்குளித்து தற்கொலை
x

மதுகுடிக்க மனைவி பணம் தராததால் வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா தென்னம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அசோக் (வயது 30). இவர், மனைவி பஞ்சாமிர்தமிடம் மதுகுடிக்க பணம் கேட்டுள்ளார்.

மனைவி பணம் தராததால் அசோக் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். இதில் தீக்காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அசோக் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாபா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story