பாம்பு கடித்து வாலிபர் சாவு
கடையம் அருகே பாம்பு கடித்து வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
தென்காசி
கடையம்:
கடையம் அருகே கோவிந்தபேரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மதியழகன் மகன் சுரேஷ்குமார் என்று நாகராஜன் (வயது 30). இவருக்கு திருமணம் ஆகி, 1½ வயதில் குழந்தை உள்ளது. இந்த நிலையில் அவரது வயலில் நேற்று நெல் அறுவடை செய்யும் பணி நடைபெற்றது. அப்போது சுரேஷ்குமார் தனது காலால் நெற்பயிரை ஒதுக்கியபோது, அவரது காலில் பாம்பு கடித்துள்ளது. இதில் அவர் வாயில் நுரை தள்ளி மயங்கி விழுந்தார். உடனே அவரை சிகிச்சைக்காக கடையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story