தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
ராணிப்பேட்டையில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை, சிப்காட் அடுத்த பெல் நரசிங்கபுரம் சர்ச் தெருவில் வசித்து வருபவர் நிலா. இவரது மகன் பிரபாகரன் (வயது 29). சென்னையில் சினிமா படப்பிடிப்பிற்கான் செட் அமைக்கும் பணி செய்து வந்தார். கடந்த சில மாதங்களாக பிரபாகரன் உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த ஒரு வாரமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்த பிரபாகரன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது குறித்து பிரபாகரனின் தாயார் அளித்த தகவலின் பேரில் சிப்காட் போலீசார் சென்று பிரபாகரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story