சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
சிவகங்கை
தஞ்சாவூர் மாவட்டம் பூலான் கொள்ளை கிராமத்தைச் சேர்ந்தவர் சித்திரவேல் (வயது 21). இவர் சிவகங்கை மாவட்டம் அளவிடங்கான் பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது 15 வயது சிறுமி ஒருவரிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்தாராம். இதில் அந்த சிறுமி இரண்டு மாத கர்ப்பமானாராம். இது தொடர்பாக அந்த சிறுமி கொடுத்த புகாரின் பேரில் சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் விமலா விசாரணை நடத்தி சித்திரை வேலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்.
Related Tags :
Next Story