போக்சோவில் வாலிபர் கைது


போக்சோவில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 26 Oct 2022 12:15 AM IST (Updated: 26 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

போக்சோவில் வாலிபர் கைது

கோயம்புத்தூர்

துடியலூர்

துடியலூர் அருகே வசிக்கும் 13 வயது சிறுமி வயிற்று வலியால் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருப்பதாக துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியலட்சுமி விசாரணை நடத்தினார். விசாரணையில், அந்த சிறுமியின் உறவினரான வசந்த் (வயது 19) என்பவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து வசந்தை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.


Next Story