மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது


மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 31 May 2023 12:15 AM IST (Updated: 31 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நெல்லிக்குப்பத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டாா்.

கடலூர்

நெல்லிக்குப்பம்:

நெல்லிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு வைடிப்பாக்கத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை மறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் காலனியை சேர்ந்த சித்தார்த் (வயது 23) என்பதும், மோட்டார் சைக்கிளை திருடி அதனை ஓட்டி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story