காட்டுமன்னார்கோவிலில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
காட்டுமன்னார்கோவிலில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கடலூர்
காட்டுமன்னார்கோவில்,
காட்டுமன்னார்கோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜா தலைமையிலான போலீசார் காட்டுமன்னார்கோவில் - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் ரம்ஜான் தைக்கால் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் போலீசாரை பார்த்ததும், சற்று முன்னதாகவே திரும்பி செல்ல முயன்றார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த வாலிபரை விரட்டிச் சென்று மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், அரியலூர் மாவட்ட கொல்லாபுரத்தை சேர்ந்த செல்வம்(வயது 30) என்பதும், கடந்த சில நாட்களுக்கு முன்பு காட்டுமன்னார்கோவில் கச்சேரி சாலையை சேர்ந்த பக்ருதீன் என்பவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், செல்வத்தை கைது செய்து, அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை மீட்டனர்.
Related Tags :
Next Story