மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது


மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 27 Oct 2022 12:15 AM IST (Updated: 27 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

கன்னியாகுமரி

குழித்துறை:

மார்த்தாண்டம் அருகே உள்ள பேரை பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 43), கொத்தனார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது மோட்டார் சைக்கிளை மார்த்தாண்டம் காந்தி மைதானத்தில் நிறுத்தி விட்டு கேரளாவுக்கு வேலைக்கு சென்றிருந்தார். 4 நாட்களுக்கு பிறகு அவர் திரும்பி வந்து பார்த்தபோது, அங்கு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் மாயமாகி இருந்தது. அதை யாரோ மர்ம நபர் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மோகன்ராஜ் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் மோகன்ராஜ் மோட்டார் சைக்கிளை திருடியது திருவிதாங்கோடு அரப்புவிளையை சேர்ந்த கபீர் மகன் அப்சல்கான் என்பது தெரியவந்தது. இதையடுத்து அப்சல்கானை போலீசார் கைது செய்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிளையும் மீட்டனர்.


Next Story