நண்பரின் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடிய வாலிபர் கைது


நண்பரின் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடிய வாலிபர் கைது
x

நண்பரின் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

அம்பை:

கல்லிடைக்குறிச்சியை சேர்ந்தவர் கணேச கண்ணன் (வயது 35). இவரது தனது வங்கி கணக்கில் இருந்து மர்ம நபர் பணம் திருடுவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்ட சைபர்கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் கணேச கண்ணன் என்பவரும், அயன் சிங்கம்பட்டியை சேர்ந்த சரவணன் (32) என்பவரும் நண்பராக பழகி‌ வந்துள்ளனர். இந்நிலையில் சரவணன், கணேச கண்ணனின் செல்போனில் அவரது வங்கி கணக்கு விவரங்கள் இருப்பதை அறிந்துள்ளார்.

இந்த நிலையில் சரவணன் எனது செல்போன் எண்ணுக்கு ரீசார்ஜ் செய்யும்படி கணேச கண்ணனிடம் கேட்டார். கணேச கண்ணன், சரவணனிடம் செல்போனை கொடுத்து ரீசார்ஜ் செய்யும்படி கூறியுள்ளார். அப்போது சரவணன், கணேச கண்ணனின் செல்போனில் இருந்த அவரது வங்கி சேமிப்பு விவரங்கள், வங்கி எண் ஆகியவற்றை அறிந்து, செல்போனை நம்பரை செயல் இழக்க செய்து அதே எண்ணை சரவணன் பெயரில் மாற்றம் செய்துள்ளார். பின்னர் இதை பயன்படுத்தி கணேச கண்ணன் வங்கி கணக்கில் இருந்து ரூ.2.21 லட்சம் திருடியது தெரியவந்தது. இதையடுத்து சைபர் கிரைம் போலீசார், சரவணனை நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.1.32 லட்சம் மீட்கப்பட்டு, உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.


Next Story