ஆடுகள் திருடிய வாலிபர் கைது


ஆடுகள் திருடிய வாலிபர் கைது
x

சோளிங்கர் அருகே ஆடுகள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த செங்கல்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ராணி. இவருடைய 4 ஆடுகளை மர்மநபர்கள் திருடிச்சென்றுவிட்டனர். இதுகுறித்து சோளிங்கர் போலீஸ் நிலையத்தில் ராணி புகார் செய்திருந்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் ரெண்டாடி கிராமம் பச்சையம்மன் கோவில் அருகே சோளிங்கர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தம், சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட மோட்டார் சைக்கிளை நிறுத்தினர். உடனே பின்னால் உட்கார்ந்து இருந்த ஒருவர் தப்பி ஓடிவிட்டார். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவரிடம் விசாரணை செய்ததில் அவர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் திமிதிபாளையம் கிராமத்தை சேர்ந்த பவன் (வயது 22) என்பதும், தப்பி ஓடியவர் குப்புக்கல்மேடு கிராமத்தை சேர்ந்த வினோத் என்பதும் தெரியவந்தது.

இவர்கள் செலவுக்கு பணம் இல்லாததால் ராணியின் ஆடுகளை திருடியதை ஒப்புக்கொண்டனர். அவரை கைது செய்த போலீசார் 4 ஆடுகளை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய வினோத்தை தேடி வருகின்றனர்.


Next Story