தனியார் நிறுவன ஊழியரிடம் பணம் பறித்த வாலிபர் கைது


தனியார் நிறுவன ஊழியரிடம் பணம் பறித்த வாலிபர் கைது
x

நெல்லையில் தனியார் நிறுவன ஊழியரிடம் பணம் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

நெல்லை டவுன் புட்டாரத்தி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் உமாசெந்தில்கணேஷ் (வயது 36). தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று முன்தினம் வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலின் முன்பு செல்போனில் பேசிக்கொண்டு இருந்தாராம். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர் உமாசெந்தில்கணேசின் செல்போனை பறிக்க முயன்றார். சுதாரித்துக்கொண்ட அவர், அந்த மர்மநபரை தடுத்தார். அப்போது அந்த நபர் உமாசெந்தில்கணேசை மிரட்டி அவரிடம் இருந்து ரூ.500-யை பறித்து சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து உமாசெந்தில்கணேஷ் பாளையங்கோட்டை குற்றப்பிரிவில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், பணம் பறிப்பில் ஈடுபட்ட அருகன்குளத்தை சேர்ந்த கந்தசாமி என்ற கார்த்திக் (19) என்பவரை கைது செய்தனர்.


Next Story