பெண்ணை தாக்கிய வாலிபர் கைது


பெண்ணை தாக்கிய வாலிபர் கைது
x

பெண்ணை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

அரியலூர்

வி.கைகாட்டி:

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி தேளூர் காலனித் தெருவை சேர்ந்தவர் ஜோதிவேல். இவரது மனைவி சாந்தா(வயது 50). இவர் கடந்த 20-ந் தேதி அதே ஊரைச் சேர்ந்த தனம் என்பவரின் வீட்டில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த தேளூர் காலனி தெருவை சேர்ந்த ராஜாங்கம் மகன் மகேந்திரன்(33), தகாத வார்த்தையால் திட்டி கையில் வைத்திருந்த கட்டையால் சாந்தாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் படுகாயமடைந்த சாந்தா 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கயர்லாபாத் போலீசில் சாந்தா கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மகேந்திரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story