பெண்ணை தாக்கிய வாலிபர் கைது


பெண்ணை தாக்கிய வாலிபர் கைது
x

பெண்ணை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை கே.டி.சி.நகர், மங்கம்மாள் சாலை, அய்யப்பா நகரில் தமயந்தி மலர்கொடி (வயது 35) என்பவர் 4 வீடுகள் மற்றும் 3 கடைகள் ஆகியவற்றை வாடகைக்கு கொடுக்க வைத்திருந்தார். இந்த நிலையில் பாளையங்கோட்டை என்.ஜி.ஓ.காலனியை சேர்ந்த ஆசிக் (28) என்பவர் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார். ஆனால் அவர் 3 வீடுகளில் இருந்த பூட்டுகளை உடைத்து விட்டு, புதிய பூட்டுகளை வைத்து பூட்டி உள்ளார்.

இதைக்கண்ட தமயந்தி மலர்கொடி, வீட்டை காலி செய்யுமாறு ஆசிக்கிடம் கூறிஉள்ளார். அதற்கு வீட்டை காலி செய்ய வேண்டுமானால் ரூ.2 லட்சம் தர வேண்டும். இல்லை என்றால் வீட்டை காலி செய்ய முடியாது என்று மிரட்டி உள்ளனர்.

இதுகுறித்து தமயந்தி மலர்கொடி முதல்-அமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் அளித்தார். அந்த மனு தொடர்பான விசாரணைக்காக தாலுகா போலீஸ் நிலையம் அருகே சீவலப்பேரி ரோட்டில் தமயந்தி மலர்கொடி நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு ஆசிக் உள்பட 2 பேர் வந்து, அவரை அவதூறாக பேசி கையால் தாக்கி மிரட்டல் விடுத்து சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தமயந்தி மலர்கொடி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் சாவித்திரி வழக்கு பதிவு செய்து ஆசிக்கை கைது செய்தார். மேலும் ஒருவரை தேடி வருகிறார்.


Next Story