வக்கீலை தாக்கிய வாலிபர் கைது
திசையன்விளை அருகே வக்கீலை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி
திசையன்விளை:
திசையன்விளை அருகே உள்ள கரைசுத்துபுதூர் நடுத்தெருவை சேர்நதவர் சதாசிவம் (வயது 25). நெல்லை கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவர் சம்பவத்தன்று நெல்லையில் இருந்து திசையன்விளைக்கு அரசு பஸ்சில் வந்துள்ளார். அவர் இருக்கையில் அமர்ந்து இருந்தபோது அதே பஸ்சில் பயணம் செய்த உவரி வடக்கு தெருவை சேர்ந்த தியோ (23), ஜீவா (19) உள்பட 3 பேர் சதாசிவத்திடம் தகராறு செய்துள்ளனர். பஸ் திசையன்விளை காமராஜர் பஸ் நிலையம் வந்ததும் மூவரும் சேர்ந்து தன்னை தாக்கி காயம் ஏற்படுத்தியதாக சதாசிவம் திசையன்விளை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் உதய லெட்சுமி வழக்குப்பதிவு செய்து தியோவை கைது செய்தார். மற்றவர்களை தேடி வருகிறார்.
Related Tags :
Next Story