"இளங்கன்று பயமறியாது..." ஜேசிபி-யில் கெத்து காட்டும் இரண்டரை வயது சிறுவன்...!


இளங்கன்று பயமறியாது... ஜேசிபி-யில் கெத்து காட்டும் இரண்டரை வயது சிறுவன்...!
x

இரண்டரை வயது சிறுவன் ஜேசிபி இயந்திரத்தை இயக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ள குட்டத்துப்பட்டியைச் சேர்ந்த ஆசிரியர் தம்பதியான தாமஸ் ரூனி ஆகியோர் விவசாய பணிகளுக்காக ஜேசிபி இயந்திரம் ஒன்றை வாங்கி வைத்துள்ளனர்.

இந்த தம்பதியின் இரண்டரை வயது மகன் கோல்டன் ஸ்டோவின் இளங்கன்று மயறியாது என்பதை போல தானாகவே வயல்வெளிகளில் கிடாச்சி, ஜேசிபி இயந்திரங்களை இயக்கி வருகிறார்.

வயல்வெளிகளில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களில் கோல்டன் ஸ்டோவின் கிடாச்சி, ஜேசிபி வாகனங்களில் மேலே ஏறி இயக்கி தானாகவே கிடங்குகளை தோண்டியும், மணல்களை அள்ளியும் போடுகிறார். இரண்டரை வயது சிறுவன் ஜேசிபி இயக்கும் செயலை அக்கம் பக்கத்தினர் ஆச்சரியத்துடன் கண்டு களித்து சென்றனர்.

கோல்டன் ஸ்டோவினின் பெற்றோர் கின்னஸ் சாதனையில் தனது குழந்தையின் பெயரை இடம் பெற செய்ய வேண்டும் என்பதற்காக தொடர்ந்து பயிற்சி அளித்து வருவதாக தங்களது விருப்பத்தை தெரிவித்துள்ளனர்.



Next Story