இளவட்டக்கல்லை தூக்கி அசத்திய இளைஞர்கள்


இளவட்டக்கல்லை தூக்கி அசத்திய இளைஞர்கள்
x

வடலிவிளையில் இளவட்டக்கல்லை தூக்கி இளைஞர்கள் அசத்தினார்கள்.

திருநெல்வேலி

பணகுடி:

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே வடலிவிளையில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கி, போட்டிகளை தொடங்கி வைத்தார்.

இதில் 88 கிலோ இளவட்டக்கல் தூக்கும் போட்டியில் பிளஸ்-2 மாணவர்கள் பரத், புவின்ராஜ் முறையே முதல் 2 இடங்களை பிடித்தனர். 129 கிலோ இளவட்டக்கல் தூக்கும் போட்டியில் செல்லப்பாண்டி, அருண் வெங்கடேஷ் முறையே முதல் 2 இடங்களை வென்றனர். 88 கிலோ இளவட்டக்கல்லை தூக்கி தலையை சுற்றும் போட்டியில் முத்துபாண்டி 20 முறையும், பிரதீஸ்வரன் 20 முறையும் சுற்றி முதல் 2 இடங்களை பிடித்தனர்.

திருமணமான பெண்கள் பங்கேற்ற உரல் தூக்கும் போட்டியில் ராஜகுமாரி ஒரு நிமிடத்தில் 11 முறையும், தங்கபுஷ்பம 7 முறையும் தூக்கி முதல் 2 இடங்களை வென்றனர். உரலை ஒற்றை கையால் தூக்கி நிறுத்தும் போட்டியில் அஜய் 30.59 வினாடிகளும், பாலகிருஷ்ணன் 29.15 வினாடிகளும் நிறுத்தி முதல் 2 இடங்களை பிடித்தனர். போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. விழாவில் மாவட்ட கவுன்சிலர் பாஸ்கர், பணகுடி பேரூராட்சி துணைத்தலைவர் சகாய புஷ்பராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story