இளம்பெண் தூக்குப்போட்டு சாவு


இளம்பெண் தூக்குப்போட்டு சாவு
x

மானூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். அவரை தற்கொலைக்கு தூண்டிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருநெல்வேலி

மானூர்:

மானூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். அவரை தற்கொலைக்கு தூண்டிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கூலி தொழிலாளி

நெல்லை மாவட்டம் மானூர் அருகே வடக்கு வாகைக்குளத்தைச் சேர்ந்தவர் பரமசிவன். கூலி தொழிலாளி. இவருடைய மனைவி செல்வகிேரஸ் (வயது 25). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் உச்சிமாகாளி (32). இவருக்கும், செல்வகிரேசுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து உச்சிமாகாளி ஆசைவார்த்தை கூறி செல்வகிரேசிடம் இருந்து 20 பவுன் தங்க நகைகள், ரூ.2 லட்சம் வாங்கி உள்ளார்.

பின்னர் உச்சிமாகாளி நகை, பணத்தை திருப்பி கொடுக்க மறுத்துள்ளார். மேலும் நகை, பணம் குறித்து கேட்டால் செல்வகிரேசின் ஆபாச வீடியோவை வெளியிடுவதாகவும் அவரிடம் மிரட்டியுள்ளார்.

தற்கொலை

இதனால் மனமுடைந்த செல்வகிரேஸ் நேற்று முன்தினம் தனது வீட்டில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். உடனே அவரை குடும்பத்தினர் காப்பாற்றி சிகிச்சைக்காக அழகியபாண்டியபுரம் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே செல்வகிரேஸ் இறந்ததாக தெரிவித்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், மானூர் போலீசார் விரைந்து சென்று, இறந்த செல்வகிரேசின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

வாலிபர் மீது வழக்கு

இதுதொடர்பாக செல்வகிரேசின் தந்தை தூதன் அளித்த புகாரின்பேரில், தற்கொலைக்கு தூண்டியதாக உச்சிமாகாளி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story