விருதுநகரில் தீக்குளித்த இளம்பெண் சாவு


விருதுநகரில் தீக்குளித்த இளம்பெண் சாவு
x

விருதுநகரில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக அவருடைய கணவர், மாமியார் மீது பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்


விருதுநகரில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக அவருடைய கணவர், மாமியார் மீது பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

காதல் திருமணம்

விருதுநகர் குல்லூர்சந்தையை சேர்ந்தவர் முருகேசன் (வயது 49). இவருடைய மகள் விஜயலட்சுமி (21).

இவரும், எத்திநாயக்கன்பட்டியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இந்த நிலையில், கணவர் வீட்டில் தீக்குளித்த விஜயலட்சுமி, அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து அவருடைய தந்தை முருகேசன், சூலக்கரை போலீசில் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:-

எனது கடைசி மகள் விஜயலட்சுமியும், எத்திநாயக்கன்பட்டியை சேர்ந்த பாலசுப்பிரமணியனும் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றியபோது கடந்த 2019-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

அடிக்கடி தகராறு

இதையடுத்து போலீசில் புகார் செய்ததின்பேரில் பாலசுப்பிரமணியன் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் விடுவிக்கப்பட்ட பின்பு கடந்த 23.8.2021 அன்று அவர்கள் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

விஜயலட்சுமிக்கும், மாமியார் மாரியம்மாள் மற்றும் கணவர் பாலசுப்பிரமணியனுக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில் நான் விஜயலட்சுமியை எனது வீட்டிற்கு அழைத்து வந்தேன்.

ஒரு மாதத்திற்கு முன்பு பாலசுப்பிரமணியன் விஜயலட்சுமியை சமாதானம் செய்து தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

தற்கொலை

கடந்த 7-ந்் தேதி பாலசுப்பிரமணியன் எனது மூத்த மகள் பாக்கியலட்சுமிக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு விஜயலட்சுமி வீட்டில் தீக்குளித்து விட்டதாகவும் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.

அங்கு விஜயலட்சுமி சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். மாமியார் மாரியம்மாள் மற்றும் கணவர் பாலசுப்பிரமணியன் ஆகியோர்தான் எனது மகள் தற்கொலைக்கு காரணம். எனவே தற்கொலைக்கு தூண்டிய அவர்கள் 2 பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சாத்தூர் ஆர்.டி.ஓ. மேல்விசாரணை நடத்துகிறார்.


Next Story