தொடக்கக்கல்வி பட்டய தேர்விற்கான நுழைவுச்சீட்டை 12-ந் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம்


தொடக்கக்கல்வி பட்டய தேர்விற்கான நுழைவுச்சீட்டை 12-ந் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம்
x
தினத்தந்தி 9 Jun 2023 11:51 PM IST (Updated: 10 Jun 2023 12:01 AM IST)
t-max-icont-min-icon

தொடக்கக்கல்வி பட்டய தேர்விற்கான நுழைவுச்சீட்டை வருகிற 12-ந் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் மயில்வாகனன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வின் முதலாம் ஆண்டு தேர்வுகள் வருகிற 23-ந் தேதி தொடங்கி ஜூலை 12-ந் தேதி வரையும், இரண்டாம் ஆண்டு தேர்வுகள் வருகிற 22-ந் தேதி தொடங்கி ஜூலை 11-ந் தேதி வரையும் நடைபெற உள்ளது. இந்த தேர்விற்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள் மற்றும் தட்கல் முறையில் விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள் அனைவரும் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக வருகிற 12-ந் தேதி பிற்பகல் முதல் தங்களின் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை உள்ளீடு செய்து, தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை (ஹால் டிக்கெட்) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தனித்தேர்வர்கள் என்ற இணையதளத்திற்கு சென்று ஹால் டிக்கெட் என்ற வாசகத்தை 'கிளிக்' செய்தால் தோன்றும் பக்கத்தில் 'டி.இ.இ. எக்சாம் ஜூன்-ஜூலை 2023 பிரைவேட் கான்டிடேட் ஹால் டிக்கெட் டவுன்லோடு' என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதனைத்தொடர்ந்து தோன்றும் பக்கத்தில் தனித்தேர்வர் தனது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வுக்கூட அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Next Story