நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்


நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
x

நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நேரிடையாக http:/nationalawardstoteachers.education.gov.in. என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் விண்ணப்பிக்கக் கூடாது. 2021-ம் ஆண்டில் குறைந்தது 4 மாதங்களாவது பணியாற்றி இருக்க வேண்டும். அலுவலகங்களில் நிர்வாகப்பணி மேற்கொள்ளும் ஆசிரியர்கள் விண்ணப்பிக்க கூடாது. மனிதவள மேம்பாட்டுத்துறையில் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஆசிரியர்கள் வருகிற 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story