10, 12-ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு 27-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
10, 12-ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு 27-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் கல்வித்துறை அறிவிப்பு.
சென்னை,
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 20-ந்தேதி வெளியான நிலையில், தேர்வில் தோல்வியடைந்தவர்கள் மற்றும் தேர்வை எழுதாதவர்களுக்கு துணைத்தேர்வு நடத்தப்பட உள்ளது.
அதன்படி, 12-ம் வகுப்பு துணைத்தேர்வு அடுத்த மாதம் (ஜூலை) 25-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி வரையிலும், 11-ம் வகுப்புக்கு ஆகஸ்டு 2-ந்தேதி முதல் 10-ந்தேதி வரையிலும், 10-ம் வகுப்புக்கு ஆகஸ்டு 2-ந்தேதி முதல் 8-ந்தேதி வரையிலும் நடக்க உள்ளது.
இதில் 10, 12-ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு வருகிற 27-ந்தேதி முதல் அடுத்த மாதம் 4-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். 11-ம் வகுப்புக்கு, பொதுத்தேர்வு முடிவு வெளியான பிறகு, துணைத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு தேதி அறிவிக்கப்படும். மேலும் தகவல்களுக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம்.
மேற்கண்ட தகவல் கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.