நொய்யல் பகுதிகளில் மஞ்சள்-பூக்கள் விலை வீழ்ச்சி


நொய்யல் பகுதிகளில் மஞ்சள்-பூக்கள் விலை வீழ்ச்சி
x

நொய்யல் பகுதிகளில் மஞ்சள்-பூக்கள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

கரூர்

நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கரில் மஞ்சள் பயிர் செய்யப்பட்டுள்ளது. பயிர் செய்து 10 மாதங்கள் ஆனதும் பறித்து ஈரோடு பகுதிகளில் செயல்பட்டு வரும் தனியார் மஞ்சள் மார்க்கெட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் 100 கிலோ கொண்ட மஞ்சள் மூட்டை ரூ.7 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை விற்பனையானது. தற்போது 100 கிலோ கொண்ட ஒரு மூட்டை மஞ்சள் ரூ.4 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை விற்பனையாகிறது.

இதேபோல் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது. பூக்கள் விளைந்தவுடன் பறித்து உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். நேற்று குண்டு மல்லி கிலோ ரூ.600-க்கும், சம்பங்கி ரூ.50- க்கும், அரளி ரூ.100-க்கும், ரோஜா ரூ.120- முல்லை ரூ.600-க்கும் விற்பனையானது. தொடர் மழையின் காரணமாக பூக்கள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.


Next Story