சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் யாகசாலை பூஜை தொடங்கியது
சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் யாகசாலை பூஜை தொடங்கியது
நாளை(புதன்கிழமை) குடமுழுக்கு நடைபெறுவதை முன்னிட்டு சிக்கல் சிங்காரவேலர் கோவி்லில் யாகசாலை பூஜை தொடங்கியது.
சிங்காரவேலவர் கோவில்
நாகை மாவட்டம் சிக்கலில் சிங்காரவேலவர் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான திருப்பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன. அதன்படி கடந்த 29- ந்தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் குடமுழுக்கு விழா தொடங்கியது.
யாகசாலை பூஜை
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான முதல் கால யாகசாலை பூஜை நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. இதற்காக 52 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு 108 சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜைகளை தொடங்கினர். இதற்காக கோவிலின் மேற்கு பகுதியில் உள்ள பால் குளத்தில் இருந்து புனித நீர் யானை மீது எடுத்து வந்து யாகசாலையில் வைக்கப்பட்டது.
நேற்று 2 மற்றும் 3- ம் கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
குடமுழுக்கு
நாளை (புதன்கிழமை) காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கோவில் விமான கலசத்துக்கு புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடக்கிறது. குடமுழுக்கு விழாவையொட்டி 400-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.