திருவள்ளூரில் நடந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு


திருவள்ளூரில் நடந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு
x

திருவள்ளூரில் 3 மையங்களில் நடைபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வில் ஆண், பெண் இருபாலர் உள்பட 2,933 பேர் தேர்வு எழுதினர்.

திருவள்ளூர்

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு

தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வு வாரியம் சார்பில் ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் 621 பணியிடங்களுக்கான சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டத்தை பொறுத்தவரை ஆண் தேர்வர்களுக்காக 2 தேர்வு மையங்களும், பெண் தேர்வர்களுக்காக 1 தேர்வு மையமும் என மொத்தம் 3 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இதில் சி.சி.சி.ஹிந்து மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 1,300 தேர்வர்களும், திருவள்ளூர் ஸ்ரீநிகேதன் மேல்நிலைப் பள்ளியில் 1,075 தேர்வர்களும் என 2 மையங்களில் ஆண்களும், திருவள்ளூர் டி.ஆர்.பி.சி.சி பள்ளியில் 558 பெண் தேர்வர்களும் என திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 2,933 தேர்வர்கள் தேர்வு எழுதினர்.

தேர்வர்களுக்கு சோதனை

இதனையடுத்து தேர்வு எழுதும் தேர்வர்கள் காலை 8 மணிக்கு தேர்வு மையத்திற்குள் வர வேண்டும் என்ற நிலையில் நீண்ட வரிசையில் தேர்வர்கள் நிற்கவைக்கப்பட்டு ஒவ்வொருவராக கைப்பை, புத்தகங்கள், செல்போன், கால்குலேட்டர், ப்ளூடூத் உள்ளிட்ட எலக்ட்ரானிக் உபகரணங்கள் ஏதேனும் வைத்துள்ளனரா? என்பதை சோதனை செய்யப்பட்டனர். பின்னரே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து அமலாக்க பிரிவு போலீஸ் ஐ.ஜி.ராதிகா தேர்வு மையங்களில் நேரில் வந்து பார்வையிட்டார்.

தேர்வையொட்டி, திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் உத்தரவின் பேரில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அரிக்குமார் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story