உலக யோகா தினம்: கோர்ட்டு, ஆஸ்பத்திரி ஊழியர்களுக்கு யோகா பயிற்சி
உலக யோகா தினத்தையொட்டி கோர்ட்டு, ஆஸ்பத்திரி ஊழியர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
உலக யோகா தினத்தையொட்டி கோர்ட்டு, ஆஸ்பத்திரி ஊழியர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
யோகா தினம்
சிவகங்கை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில் உலக யோக தினத்தை முன்னிட்டு ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் மாவட்ட நீதிபதி குருமூர்த்தி தலைமையில் யோகா தின பயிற்சிகள் நடைபெற்றது. சிவகங்கை மனவளகலைமன்றம் யோகா குரு மகேஷ்வரன் மற்றும் மனவளகலைமன்ற உறுப்பினர்கள் யோக பயிற்சியினை அளித்தனர். நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட நீதிபதி சத்திய தாரா, குடும்ப நல நீதிபதி முத்துக்குமரன், போக்சோ நீதிபதி சரத்ராஜ், தலைமை குற்றவியல் நீதிதுறை சுதாகர், மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி பரமேஸ்வரி, சார்பு நீதிபதி சுந்தரராஜ், ஊழல் தடுப்பு சிறப்பு நீதிபதி செந்தில் முரளி, குற்றவியல் நீதிதுறை நடுவா் எண்.1 அனிதாகிறிஸ்டி, கூடுதல் மகிளா நீதிபதி ஆப்ரின் பேகம், வக்கீல்கள் சங்க நிர்வாகிகள், வக்கீல்கள், நீதிமன்ற பணியளார்கள் கலந்து கொண்டனர்.
இளையான்குடியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் கோர்ட்டில் நீதிபதி ஹரிராமகிருஷ்ணன் தலைமையில் வக்கீல்கள் அலுவலக பணியாளர்கள் யோகா பயிற்சியினை கோர்ட்டு வளாகத்தில் செய்தார்கள். நீதிபதி ஹரிராமகிருஷ்ணன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வக்கீல்கள் மற்றும் பணியாளர்கள் தினந்தோறும் யோகா பயிற்சிகள் செய்யுமாறு கேட்டு கொண்டார். யோகா தினந்தோறும் செய்தால் மன அழுத்தமின்றி வாழ்நாள் முழுவதும் அமைதியான சிந்தனையில் செயல்பட முடியும். இந்நிகழ்ச்சியில் வக்கீல்கள் கல்யாணி, ரவி, எஸ்.எஸ்.அண்ணாதுரை, பாலையா, கோர்ட்டு தலைமை எழுத்தர் சுமித்ரா மற்றும் கோர்ட்டு பணியாளர்கள் கலந்து கொண்டு யோகா பயிற்சிகளை செய்தனர்.
பயிற்சி
சோழபுரம் ரமணவிகாஸ் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தினம் நடைபெற்றது. பள்ளி தாளாளர் மற்றும் தலைமையாசிரியர் முத்துக்கண்ணன் தலைமை தாங்கினார். யோகா ஒருங்கிணைப்பாளர் குமார் முன்னிலையில் யோகா மற்றும் தியான பயிற்சிகள் நடைபெற்றன. அக்னி பாண்டியன், ஜெயக்குமார், அர்ச்சனா ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர். இந்நிகழ்வில் சுமார் 325 மாணவிகளும், 450 மாணவர்களும் பங்கேற்றனர். உதவித் தலைமையாசிரியர் கணேஷ் நிகழ்வுகளை ஒருங்கிணைப்பு செய்தார். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
சர்வதேச யோகா தினம் நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு திருப்புவனத்தில் உள்ள கோர்ட்டு வளாகத்தில் நீதிபதி குருலெட்சுமி தலைமையில் யோகா பயிற்சி நடைபெற்றது. அப்போது வக்கீல்கள், கோர்ட்டு அலுவலர்கள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டு யோகா பயிற்சிகளை செய்தனர்.