உலக மக்கள் தொகை தின உறுதிமொழி ஏற்பு
தென்காசியில் உலக மக்கள் தொகை தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று உலக மக்கள் தொகை தின உறுதிமொழி எடுக்கப்பட்டது. தென்காசி மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
மருத்துவம் ஊடக நலப்பணிகள் மற்றும் குடும்ப நலம் நெல்லை மாவட்ட துணை இயக்குனர் டாக்டர் ராமநாதன் வரவேற்று பேசினார். தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு ரதத்தை தொடங்கி வைத்தார். பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. மேலும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு மஞ்சப்பை நெல்லை மாவட்ட குடும்ப நலத்துறை சார்பில் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பிரேமலதா, துணை இயக்குனர்கள் முரளி சங்கர், துரை, அலர் சாந்தி, தென்காசி மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின், உறைவிட மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜேஷ், டாக்டர்கள் அனிதா பாலின், புனிதவதி, மாவட்ட குடும்ப நல செயலக புள்ளி விவர உதவியாளர் வேலு, குடும்பநல மாவட்ட விரிவாக்க கல்வியாளர் ஜெயசித்ரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.