மயிலத்தில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி


மயிலத்தில்    உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி
x

மயிலத்தில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

விழுப்புரம்

மயிலம்,

உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி மற்றும் வாகன பிரசாரம் தொடக்க நிகழ்ச்சி மயிலம் ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள் உயர்நிலைப் பள்ளி முன்பு நடைபெற்றது. இதற்கு மயிலம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் தேன்மொழி தலைமை தாங்கினார். பள்ளி செயலாளர் குமாரசிவ விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் பன்னீர்செல்வம் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மயிலம் ஒன்றியக்குழு பெருந்தலைவர் யோகேஸ்வரி மணிமாறன் கலந்து கொண்டு விழிப்புணர்வு வாகன பிரசாரத்தையும், பேரணியையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் பேரணியாக சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த பேரணியானது பள்ளியில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக மயிலம் பஸ் நிறுத்தத்தில் முடிவடைந்தது. அப்போது மயிலம் தெற்கு ஒன்றிய செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வக்கீல் சேதுநாதன், மயிலம் வடக்கு ஒன்றிய செயலாளர் மணிமாறன், மயிலம் மத்திய ஒன்றிய செயலாளர் செழியன், மயிலம் ஒன்றிய கவுன்சிலர் செல்வகுமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் வீடூர் ஜெகதீஸ்வரி பிரகாஷ், கொல்லியங்குளம் ஜோதிலட்சுமி வர்ணமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story