மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக புகைப்பட தினம் கொண்டாட்டம்


மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக புகைப்பட தினம் கொண்டாட்டம்
x

மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக புகைப்பட தினம் கொண்டாடப்பட்டது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் தத்தனூர் அருகே உள்ள மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காட்சி தொடர்பியல் துறை சார்பில் 184-வது உலக புகைப்பட தினம் கொண்டாடப்பட்டது. இதற்கு கல்வி நிறுவனங்களின் தாளாளர் ரகுநாதன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் டாக்டர் சேகர் மற்றும் கல்லூரி துணை முதல்வர் சங்கீதா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். காட்சி தொடர்பியல் துறை தலைவர் சிலம்பரசன் வரவேற்றார். இதையடுத்து, தாளாளர் ரகுநாதன் பேசும்போது கூறியதாவது:-

மாணவர்களாகிய நீங்கள் அனைவரும் புகைப்படத்துறை, பத்திரிகை துறை, காட்சி தொடர்பியல் துறை, ஊடகத்துறை, சினிமா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிய வேண்டும். அதற்கு உங்கள் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். உங்கள் தனித்திறமை சமூகத்தால் பாராட்டப்பட கூடியதாக அமைய வேண்டும். உலகம் போற்றும் சிறந்த படைப்புகளை நீங்கள் உருவாக்க வேண்டும். திறமை ஒன்று மட்டுமே உங்களை வாழ்க்கையில் உயர்த்தும். வித்தியாசமாகவும், மாறுபட்டும் புதிதாக சிந்திக்க வேண்டும். சமூகம் உங்களை வரவேற்கும் வகையில் உங்கள் படைப்புகள் அமைய வேண்டும். மாறிவரும் உலகில் மாற்றத்திற்கு ஏற்ப நம்மை நாம் தயார் செய்து கொள்ள வேண்டும். கல்வி, அறிவு, திறமை, தனித்துவம், தகுதி, நுணுக்கங்கள், யோசிக்கும் திறனை வளர்த்துக்கொண்டு உங்களை புதுப்பித்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதனைதொடர்ந்து புகைப்படத்துறை வரலாறு மற்றும் புகைப்படக் கருவியின் வளர்ச்சி குறித்து கல்லூரி இயக்குனர் ராசமாணிக்கம் எடுத்துரைத்தார். பின்னர் புகைப்பட கண்காட்சியில் இடம் பெற்ற சிறந்த படங்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


Next Story