உலக செவிலியர் தினம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து


உலக செவிலியர் தினம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
x

உலக செவிலியர் தினத்தையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

உலகெங்கிலும் உள்ள மக்களின் நல்வாழ்க்கையிலும், ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதிலும் செவிலியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மே 12-ந் தேதி பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த தினத்தை நினைவுகூரும் வகையிலும், செவிலியர்களை கவுரவிக்கும் வகையிலும், நோயாளிகளுக்கு செவிலியர்கள் செய்யும் சேவைகளை போற்றும் வகையிலும் 'உலக செவிலியர் தினம்' கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில், உலக செவிலியர் தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

"அன்பும் அரவணைப்பும் சேர்த்து நோயாளிகளைக் கனிவுடன் கவனித்து அவர்கள் நலம்பெற சேவையாற்றும் செவிலியர் அனைவர்க்கும் உலக செவிலியர் தினம் வாழ்த்துகள்!. காயமாற்றும் அவர்களது வாழ்வில் ஒளியேற்றிட நமது அரசு தொடர்ந்து செயலாற்றிடும்!" என்று தெரிவித்துள்ளார்.


Next Story