உலக கல்லீரல் அழற்சி தின விழிப்புணர்வு பேரணி


உலக கல்லீரல் அழற்சி தின விழிப்புணர்வு பேரணி
x

நெல்லையில் உலக கல்லீரல் அழற்சி தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.

திருநெல்வேலி

கல்லீரலை தாக்கும் 'ஹெபடைட்டிஸ்-பி' வைரசை கண்டுபிடித்த பேராசிரியர் புளூம்பெர்க்கின் பிறந்த நாளான நேற்று உலக கல்லீரல் அழற்சி தினமாக கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி வளாகத்தில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. கல்லீரல், குடல்நல மருத்துவப்பிரிவு துறை தலைவர் டாக்டர் கந்தசாமி என்ற குமார் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் ரேவதி பாலன் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து கர்ப்பகால கல்லீரல் அலர்ஜி அல்லது வீக்கம் நோயை கண்டுபிடிக்கும் பரிசோதனை, மருத்துவமனையில் பணிபுரியும் முன்கள பணியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஹெபடைட்டிஸ்-பி தடுப்பூசி மற்றும் பைப்ரோஸ்கேன் பரிசோதனை நடைபெற்றது. டாக்டர் ஷபிக் நன்றி கூறினார். ஆஸ்பத்திரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

சிறுநீரகவியல் பிரிவு துறை தலைவர் டாக்டர் ராமசுப்பிரமணியன், உறைவிட மருத்துவர் ரவி, செவிலியர் கண்காணிப்பாளர்கள், நெல்லை இந்திய மருத்துவ கழக தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் இப்ராஹிம், நிதி செயலாளர் பாபுராஜ் மற்றும் செவிலியர் பயிற்சி மாணவிகள், பாராமெடிக்கல் மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளை செவிலியர் பயிற்றுனர் செல்வம் தொகுத்து வழங்கினார்.


Next Story