உலக சுற்றுச்சூழல் தின விழா
விழுப்புரம் நீதிமன்றத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழா நடந்தது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பூர்ணிமா தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். சிறப்பு சார்பு நீதிபதி திருமணி வரவேற்றார். சிறப்பு சார்பு நீதிபதி பிரபாதாமஸ், அரசு வக்கீல் சுப்பிரமணியன், வக்கீல்கள் நீலமேகவண்ணன், சந்திரமவுலி, சுற்றுச்சூழல் பசுமை ஆர்வலர் மணிகண்டன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் நீதிபதிகள், அரசு வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள், சுற்றுச்சூழல் பசுமை ஆர்வலர்கள், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு சுற்றுச்சூழல் தின ஊர்வலம் நடத்தி மருத்துவ குணமுடைய மரங்களை, நீதிமன்ற வளாகத்தில் நட்டனர். தொடர்ந்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. முடிவில் முதன்மை சார்பு நீதிபதி விஜயகுமார் நன்றி கூறினார்.