திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி சார்பில் உலக தாய்ப்பால் வாரவிழா
திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி சார்பில் உலக தாய்ப்பால் வாரவிழா கொண்டாடப்பட்டது.
திருச்செந்தூர்:
தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் வேண்டுகோளின்படி, தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி டீன் அறிவுரைப்படியும், கல்லூரி முதல்வர் கலைக்குருச்செல்வி வழிகாட்டுதலின்படியும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உலக தாய்ப்பால் வாரவிழா 3 நாட்கள் கொண்டாடப்பட்டது. முதல் நாள் நிகழ்ச்சி தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் கல்லூரியில் நடந்தது. இதில் தாய்ப்பால் தினம் பற்றி கோலப்போட்டி நடந்தது.
2-ம் நாள் நிகழ்ச்சி சோனகன்விளை ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்தது. இதில் கல்லூரி மாணவர் செவிலியர் சங்க அறிவுரையாளர் சுமதி வரவேற்று பேசினார். ஆரம்ப சுகாதார மைய தலைமை டாக்டர் அம்பிகாபதி தாய்ப்பால் பற்றிய கருத்துகளை தாய்மார்களிடம் விளக்கி கூறினார். 3-ம் ஆண்டு மாணவிகள் முத்துமாரி, மகாலெட்சுமி ஆகியோர் கணிணி மூலம் தாய்ப்பால் பற்றி விரிவாக தாய்மார்களுக்கு விளக்கி கூறினர். குழந்தை செவிலியர் துறை இணை பேராசிரியர் ஹேமா நன்றி கூறினார்.
3-வது நாள் நிகழ்ச்சி திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் நடந்தது. கல்லூரி இணை பேராசிரியர் ஹேமா வரவேற்று பேசினார். இதில், சிறப்பு அழைப்பாளராக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் பொன்ரவி கலந்து கொண்டு தாய்ப்பாலின் அவசியத்தை விளக்கி கூறினார். குழந்தை நல மருத்துவர் சசிகலா சீம்பாலின் அவசியம் குறித்து பேசினார். பின்னர் மகப்பேறு மருத்துவர் சியாமளா தாய்ப்பாலின் கருப்பொருள் பற்றி விளக்கி கூறினார்.
நிகழ்ச்சியில், குழந்தை நல மருத்துவர் அரவிந்த் தசரதன், கண்காணிப்பாளர்கள் ஜெயா, டெய்சி மற்றும் தாய்மார்கள், நர்சிங் கல்லூரி மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.