குடியாத்தம் அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா
குடியாத்தம் அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா நடந்தது.
குடியாத்தம்
குடியாத்தம் அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா நடந்தது. இதனை இன்னர்வீல் சங்கம், ரோட்டரி சங்கம் இணைந்து நடத்தியது. இதனையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
நிகழ்ச்சிகளுக்கு மருத்துவ அலுவலர் எம்.மாறன்பாபு தலைமை தாங்கினார். அரசு மருத்துவமனை ஆலோசனை குழு உறுப்பினர் கள்ளூர்ரவி, நகரமன்ற உறுப்பினர்கள் த.புவியரசி, நவீன்சங்கர், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தீபிகாபரத், அமுதாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ரோட்டரி சங்கத் தலைவர் ரங்காவாசுதேவன், இன்னர்வீல் சங்கத் தலைவர் கீதாலட்சுமி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
தாய்ப்பால் அவசியம் குறித்து குடியாத்தம் அரசு மருத்துவமனை குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் இளஞ்செழியன் சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக குடியாத்தம் அமலுவிஜயன் எம்.எல்.ஏ., நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன், ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் ஆகியோர் கலந்துகொண்டு தாய்ப்பாலின் மகத்துவம் குறித்து பேசினர்.
தொடர்ந்து குழந்தைகளுக்கு உடை மற்றும் மெத்தைகள், தாய்மார்களுக்கு சத்து பானங்கள், பிஸ்கட்டுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை ஆலோசனைக் குழு உறுப்பினர் சத்தியமூர்த்தி, ரோட்டரி செயலாளர் கணேஷ், இன்னர் வீல் சங்க செயலாளர் ஆயிஷா, முன்னாள் தலைவர்கள் வசந்தி, விஜயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து தாய்ப்பால் பற்றிய விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முடிவில் செவிலியர் சத்யாநந்தகுமார் நன்றி கூறினார்.