அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா நடைபெற்றது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா நடைபெற்றது. குழந்தைகள் நலத்துறை தலைவர் டாக்டர் பெருமாள்பிள்ளை தலைமை தாங்கினார். துணை கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்ரீதரன், துணை இருக்கை மருத்துவ அலுவலர் டாக்டர் வெங்கடேஷ், மகப்பேறு பிரிவு துணைத் தலைவர் அருமைக்கண்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சிறப்பு விருந்தினராக அருணை மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் டி.குணசிங் கலந்து கொண்டு, தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தை மற்றும் தாய்மார்களுக்கு ஏற்படும் நன்மைகளை சிறந்த வகையில் விளக்கி பேசினார். தொடர்ந்து கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து உணவினை ரோட்டரி சங்கத்தினர் வழங்கினர். இதனையொட்டி மாணவர்களுக்கு வினாடி, வினா போட்டி மற்றும் பட்டிமன்றம் நடைபெற்றது.
விழாவில் பல்வேறு தனியார் செவிலியர் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு இயல், இசை, நாடகம் மூலம் தாய்ப்பாலின் நன்மைகளை தாய்மார்களுக்கு விளக்கினர். தொடர்ந்து விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மற்றும் பங்கேற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.