தொழிலாளர்கள் மீட்பு: தேசத்தின் நம்பிக்கைக்கும் உழைப்பிற்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி- எடப்பாடி பழனிசாமி


தொழிலாளர்கள் மீட்பு: தேசத்தின் நம்பிக்கைக்கும் உழைப்பிற்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி- எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 29 Nov 2023 3:51 AM IST (Updated: 29 Nov 2023 4:12 AM IST)
t-max-icont-min-icon

மீட்கப்பட்டுள்ள 41பணியாளர்களும் விரைவில் பூரண நலம் பெற்று இல்லம் திரும்ப இறைவனை பிரார்த்திப்பதாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை,

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி சுரங்கப்பாதை சரிவில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர். இதனை தொடர்ந்து, மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கும், அவர்களை மீட்ட மீட்புக்குழுவினருக்கும் பல்வேறு தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இது தொடர்பாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறி இருப்பதாவது; "கடந்த நவம்பர் 12ம் தேதி உத்தரகாண்ட் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து அதில் சிக்கிய 41 பணியாளர்களையும் சுமார் 17 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்டுள்ள தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இது நம் தேசத்தின் நம்பிக்கைக்கும் உழைப்பிற்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். இந்த வெற்றிக்கு பாடுபட்ட அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், மீட்கப்பட்டுள்ள 41பணியாளர்களும் விரைவில் பூரண நலம் பெற்று இல்லம் திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story