சென்னை விமான நிலைய வளாகத்தில் தொழிலாளி மர்மசாவு


சென்னை விமான நிலைய வளாகத்தில் தொழிலாளி மர்மசாவு
x

சென்னை விமான நிலைய வளாகத்தில் தொழிலாளி ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

சென்னை

சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய வளாகத்தில் உள்ள விமான நிலைய கேண்டீன் அருகே கட்டுமான பணி நடந்து வருகிறது. இங்கு 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அங்கு பணியில் இருந்த விமான நிலைய ஊழியர்கள், இதுபற்றி சென்னை விமான நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் விரைந்து வந்து உடலை ஆய்வு செய்தனா். அதில் இறந்து கிடந்தவரின் உடலில் வெளி காயங்கள் எதுவும் இல்லை. பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், பிணமாக கிடந்தவரின் பெயர் ரமேஷ் என்பதும், கடந்த சில ஆண்டுகளாக அவர், சென்னை விமான நிலையத்தில் பிரிபெய்டு டாக்சிகளை சுத்தம் செய்வது, டிராலிகளை தள்ளுவது போன்ற வேலைகளை செய்து வந்து உள்ளார்.

அவா் குடிபோதைக்கு அடிமையானவா் என்றும் தெரியவந்துள்ளது. எனவே அவர், அளவுக்கு அதிகமான மதுபோதையில் உயிரிழந்தாரா? இல்லை வேறு ஏதும் காரணமா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். அவரது பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அவரது சாவுக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். ரமேஷ் உறவினர்கள் ஆலந்தூர், தாம்பரம், பல்லாவரம் போன்ற பகுதிகளில் வசிப்பதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story