ரெயிலில் அடிபட்டு தொழிலாளி பலி


ரெயிலில் அடிபட்டு தொழிலாளி பலி
x
தினத்தந்தி 24 Feb 2023 12:30 AM IST (Updated: 24 Feb 2023 2:58 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே ரெயிலில் அடிபட்டு தொழிலாளி பலியானார்.

திண்டுக்கல்


திண்டுக்கல் அருகே மொட்டணம்பட்டி பகுதியில் நேற்று காலை ரெயில் தண்டவாளத்தில் ஒரு ஆண் உடல் கிடந்தது. இதுபற்றி தகவல் அறிந்த திண்டுக்கல் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் தோமையார்புரம் பகுதியை சேர்ந்த தொழிலாளி சையது அமீர் (வயது 37) என்பதும், தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அந்த வழியாக சென்ற ரெயிலில் அடிபட்டு அவர் இறந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சையது அமீரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் அதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



Next Story