காட்டுயானை தாக்கி தொழிலாளி படுகாயம்


காட்டுயானை தாக்கி தொழிலாளி படுகாயம்
x
தினத்தந்தி 3 Oct 2023 2:15 AM IST (Updated: 3 Oct 2023 2:15 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி அருகே காட்டுயானை தாக்கி தொழிலாளி படுகாயம் அடைந்தார். அவர், விடிய, விடிய வனப்பகுதியில் தவித்த பரிதாப சம்பவம் நிகழ்ந்து உள்ளது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி அருகே காட்டுயானை தாக்கி தொழிலாளி படுகாயம் அடைந்தார். அவர், விடிய, விடிய வனப்பகுதியில் தவித்த பரிதாப சம்பவம் நிகழ்ந்து உள்ளது.

வனப்பகுதி வழியாக...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சர்க்கார்பதி வனப்பகுதி வழியாக பி.ஏ.பி. கால்வாய் பணிக்கு நேற்று காலை தொழிலாளர்கள் சென்று கொண்டு இருந்தனர். அப்போது ஒருவர் படுகாயங்களுடன் கிடப்பதை பார்த்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே வனச்சரகர் புகழேந்தி தலைமையிலான வனத்துறையினர் விரைந்து சென்று அவரை மீட்டனர்.

காட்டுயானை தாக்கியது

விசாரணையில் அவர், பழைய சர்க்கார்பதியை சேர்ந்த கூலி தொழிலாளி சுப்பிரமணி(வயது 45) என்பதும், சர்க்கார்பதியில் இருந்து பழைய சர்க்கார்பதிக்கு வனப்பகுதி வழியாக நடந்து சென்றபோது காட்டுயானை தாக்கி படுகாயம் அடைந்ததும், எழுந்து நடக்க முடியாததால் விடிய, விடிய வனப்பகுதியில் தவித்து கொண்டு இருந்ததும் தெரியவந்தது.

நிவாரண தொகை

பின்னர் அவரை பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சுப்பிரமணி அனுப்பி வைக்கப்பட்டார். அவரது குடும்பத்தினரிடம் முதற்கட்ட நிவாரண தொகை ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டது.


Next Story