விழுப்புரம் அருகே ஏரியில் மூழ்கி தொழிலாளி சாவு
விழுப்புரம் அருகே ஏரியில் மூழ்கி தொழிலாளி சாவு
விழுப்புரம்
விழுப்புரம்,
விழுப்புரம் அருகே உள்ள சோழகனூர் கிராமத்தை சேர்ந்தவர் வேங்கடத்தான் மகன் லட்சுமணன் (வயது 53). ஆடு மேய்க்கும் தொழில் செய்துவந்தார். சம்பவத்தன்று ஆடுகளை சோழகனூர் ஏரி அருகே மேய்ச்சலுக்காக ஒட்டி சென்றார்.
அப்போது எதிர்பாராதவிதமாக கால் தடுமாறி ஏரியின் உள்ளே லட்சுமணன் விழுந்து விட்டார். இதில் தண்ணீரில் மூழ்கிய அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது அண்ணன் ராமு, அளித்த புகாரின் பேரில் காணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.விழுப்புரம் அருகே
ஏரியில் மூழ்கி தொழிலாளி சாவு
Related Tags :
Next Story