குளத்தில் மூழ்கி தொழிலாளி சாவு


குளத்தில் மூழ்கி தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 1 Nov 2022 12:15 AM IST (Updated: 1 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

குளத்தில் மூழ்கி தொழிலாளி சாவு

கன்னியாகுமரி

குழித்துறை:

மார்த்தாண்டம் அருகே மருதங்கோடு தேரியாமூட்டு விளையை சேர்ந்தவர் தாசையன் (வயது 65), தொழிலாளி. இவருக்கு சுசீலா(60) என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். மகள்கள் 3 பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது. சம்பவத்தன்று மாலையில் தாசையன் வீட்டின் அருகில் உள்ள மருதங்கோடு கானக்குளத்தில் குளிக்க செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு சென்றார். குளிக்க சென்ற தாசையன் நீண்ட நேரம் ஆகியும் வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால், சந்தேகமடைந்த சுசீலா உறவினர்களுடன் குளத்துக்கு சென்று பார்த்தார். அங்கு கரையில் தாசையனின் துணிகள் இருந்தன. ஆனால், அவரை காணவில்லை. இதையடுத்து உறவினர்கள் குளத்துக்குள் இறங்கி தேடினர். அப்போது, தாசையன் தண்ணீருக்குள் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். குளத்தில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி இறந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தாசையனின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர், இதுபற்றி தாசையனின் மனைவி சுசீலா மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று தாசையனின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story